தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி தேஜா. இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘டைகர் நாகேஷ்வர் ராவ்’. பான் இந்திய திரைப்படமாக வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இத்திரைப்படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இதைத் தொடர்ந்து அவர்’ ஈகிள்’ திரைப்படத்தில் தற்பொழுது நடித்து வருகிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .

இதைத்தொடர்ந்து இயக்குனர் ஹரி ஷங்கர் இயக்கத்தில் கமிட்டாகியுள்ளார். இத்திரைப்படத்தில் யார் ஹீரோயின் என்று ரசிகர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட வந்த நிலையில் புதுமுக நடிகை ஒருவர் தான் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வைரலாகி வந்தது.இந்நிலையில் பட குழு தற்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

அதில் புதுமுக நடிகை பாக்கியஸ்ரீ போஸ் என்பவர் தான் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளார். தற்பொழுது அவரின் புகைப்படம் தான் இணையத்தில் படுவைரலாகி வருகிறது. ஏனென்றால் அவர் பார்ப்பதற்கு ரஷ்மிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அவரின் புகைப்படம் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

