சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளரும், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளருமான ஸ்ரீநிதி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மூன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை (MLA), தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் முதலமைச்சருமான விஜய் தனது கட்சியில் இணைத்துக் கொண்டதற்கு ஸ்ரீநிதி தனது ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சி விதித்த அரசியல் நிபந்தனைகளையும் கோட்பாடுகளையும் முற்றிலும் மீறும் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், தனது தார்மீக எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளதாகத் தனது கடிதத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
