#image_title
ஒரு நிறுவனத்தை நடத்துபவர்கள் குறிப்பாக லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணப்புழக்கம் செய்யும் நிறுவனங்களில் கடன் கொடுத்தவர்களிடம் பணத்தை வசூலிக்க தனி ஆட்களை நியமித்திருப்பார்கள். குறிப்பாக அந்த நிறுவனத்தின் மேனேஜர் கூட சாப்ட்கார்னர் இருப்பதாக தோற்றம் கொண்டவராக இருந்தாலும் அவரும் அடாவடியான மனிதராக தான் இருப்பார். அதுபோல் சினிமாத்துறையிலும் ஆர்ட்டிஸ்ட் மேனேஜர்கள் இருக்கின்றனர். அவர்கள், தங்களது நடிகர்கள், நடிகைகளின் சம்பளத்தை முழுமையாக வசூலிக்காமல் விட மாட்டார்கள். படக்கம்பெனிக்கு நேரில் சென்று பணத்தை கறாராக வசூலித்து விடுவார்கள்.
அதுபோல் நடிகர் சூர்யாவின் மேனேஜராக இருந்தவர் தங்கதுரை. கார்த்தி மற்றும் ஜோதிகாவுக்கும் அவர்தான் மேனேஜர். மூன்று பேருடைய கால்ஷீட், சம்பளம் வசூல் உள்ளிட்ட பணிகளை அவர்தான் நீண்ட ஆண்டுகளாக கவனித்து வந்தார். எந்த நிறுவனத்தில் சம்பளம் பாக்கி இருந்தாலும் நேரடியாக சென்று அமர்ந்து, பணத்தை கறாராக வசூலித்து வந்தவர் தங்கதுரை. பணம் கொடுத்தால் மட்டுமே அவர் ஷூட்டிங் வருவார். பணத்தை என்னிடம் கொடுங்கள். அவரை ஷூட்டிங்குக்கு அனுப்பி வைக்கிறேன், என்று மிரட்டல் தொனியில் பேசி சம்பள பணத்தை கறாராக வசூலிப்பது அவரது வழக்கம்.
தங்கதுரை இல்லாவிட்டால் சூர்யாவுக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது என்று கூறும் அளவுக்கு சோறில்லாமல் கூட சூர்யா இருந்துவிடுவார். தங்கதுரை இல்லாமல் ஒரு நாள் கூட அவரால் இருக்க முடியாது என படப்பிடிப்பு தளத்தில் பலரும் கிண்டலடிப்பது வழக்கமாம். அப்படிப்பட்ட தங்கதுரையை கிளம்புங்க, இனி நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என சூர்யா, கார்த்தி, ஜோதிகா என மூவருமே வெளியேற்றி விட்டனர். அவர்கள் இப்படி ஒரு அதிரடி முடிவெடுக்க என்ன காரணம் என்று தெரியவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது. இப்போது அந்த பொறுப்பில் சூர்யாவின் நண்பர் மனோஜ்குமார் என்பவரை நியமித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…