Categories: சினிமா

“என்னோட சந்தோசம் போயி 2 வருஷம் ஆச்சு…” நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரல்..

Spread the love

தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் 2011ம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. மேலும் அந்த தொடரே அவருக்கு பெரிய ரீச் கொடுக்க அதன்பிறகு 2013ம் ஆண்டு சரவணன் மீனாட்சி 2வில் நடித்திருந்தார். அந்த சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்றார். பெங்களுரைத் சேர்ந்த நடிகை ரச்சிதா பார்ப்பதற்கு மாநிறமாக இருந்தாலும் இவரது அழகாலும் திறமையான நடிப்பாலும் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு சீரியலில் நடித்து மிகப்பிரபலமானார் நடிகை ரச்சிதா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ தொடரில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் பெற்றோர்களின் சம்மதத்துடன் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ஜீ தொலைக்காட்சியில் நாச்சியார் என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர்.

ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, கலர்ஸ் தமிழ் சீரியலில் ஒளிபரப்பாகி வரும், இது சொல்ல மறந்த கதை சீரியலில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும், விதவைப் பெண்ணாக நடித்து வருகிறார்.இந்நிலையில் தினேஷ் , ரக்ஷிதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் தினேஷ் ரக்ஷிதாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுவதாக பல பேட்டிகளிலும், பல சந்தர்ப்பங்களிலும் தற்பொழுதும் கூட கூறி வருகிறார். ஆனால் தினேஷிடமிருந்து எப்படியாவது விவாகரத்து பெற வேண்டும் என்பதில் ரக்ஷிதா குறிக்கோளுடன் இருக்கிறார். தினேஷ் தற்பொழுது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய ரக்ஷிதா தற்பொழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான் தத்தெடுத்த வளர்த்து வரும் நாய்களுக்கு உணவளிக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில் ‘ என்னோட சந்தோசம் போயி 2 வருஷம் ஆச்சு’ என குறிப்பிட்டு அவர் தனது செல்ல பப்பியை இழந்தது குறித்து சோகத்துடன் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“கணவரின் ஆணுறுப்பை வெட்டி பார்பிக்யூ சாஸ் ஊற்றி சமைத்த மனைவி”…. திருமணமான 30-வது நாளில் நடந்த கொடூரம்…. அதிரவைக்கும் வாக்குமூலம்…!

1991-ம் ஆண்டு அக்டோபர் மாதம், கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் பீச்சில் உள்ள ஒரு விடுதியில் 56 வயதான விமானி பில் நெல்சனை,…

6 minutes ago

“பெற்றோர் இல்லாத நேரம்.. மிரட்டி மிரட்டி வன்கொடுமை”… 15 வயது சிறுமியை சீரழித்த தாய்மாமன்.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…!

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் பகுதியில் வசித்து வரும் கட்டிடத் தொழிலாளி தம்பதியினரின் 16 வயது மகள் காவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).…

26 minutes ago

“தனிமையில் இருக்கலாம் வா.. போனில் அழைத்த காதலி”… ஹோட்டலுக்கு சென்ற காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி… ஆக்ராவில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில், தன்னைத் தொடர்ந்து மிரட்டி வந்த முன்னாள் காதலனை இளம்பெண் ஒருவர் ஓட்டல் அறைக்குள் வைத்து…

39 minutes ago

அரசியல்வாதிகளின் அறைகளுக்குள் நுழையாமல்… பெண்களால் அரசியலுக்கு வர முடியாது… பப்பு யாதவின் சர்ச்சை கருத்தால் பற்றி எரியும் அரசியல்..!!

பெண் அரசியல்வாதிகள் குறித்துப் பீகார் மாநிலம் பூர்ணியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பப்பு யாதவ் தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் நாடு…

40 minutes ago

“ஈரானை விடமாட்டோம்!”: கடல்புறமாக வளைத்துப்பிடித்த அமெரிக்கா… உயிர்ச் சேதங்கள் மோசமாக இருக்கும்”… வல்லுநர்கள் எச்சரிக்கும் 2026-ன் மிகப்பெரிய வளைகுடா போர்?…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மத்திய கிழக்கில்…

43 minutes ago