Connect with us

வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிய டேனியல் பாலாஜி திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்..!!

CINEMA

வில்லன் கதாபாத்திரங்களில் கலக்கிய டேனியல் பாலாஜி திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகினர்..!!

பிரபல வில்லன் நடிகரான டேனியல் பாலாஜிக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் புரசைவாக்கத்தில் இருக்கும் அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

இயக்குனர்கள் கௌதம் வாசுதேவன் மேனன், வெற்றிமாறன் உள்ளிட்டார் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைந்த நடிகர் முரளியின் உடன்பிறவா சகோதரர் ஆவார். 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் டேனியல் பாலாஜி திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார்.

   

 

அதன் பிறகு காக்க காக்க,  பைரவா, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் சிறப்பாக நடித்தார். கம்பீரமான குரலுக்கும் வில்லத்தனத்திற்கும் பெயர் பெற்றவர் பாலாஜி. முன்னதாக மருதநாயகம் படத்திற்கு யூனிட் ப்ரொடக்ஷன் மேனேஜராக வேலை பார்த்தபோது பாலாஜிக்கு சித்தி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த தொடரில் டேனியல் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததால் டேனியல் பாலாஜி என அழைக்கப்பட்டார். நடிகர் முரளி இளம் வயதில் மரணம் அடைந்தது போல டேனியல் பாலாஜியும் 48 வயதில் தான் இறந்துள்ளார்  டேனியல் பாலாஜியின் உடல் ஓட்டேரி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

#image_title

author avatar
Priya Ram
Continue Reading
To Top