டேய் எந்திரிடா… என்னாச்சு?… நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் சிரித்துப் பேசிய… 15 வயது சிறுவன் திடீர் மரணம்… நஆடுங்க வைக்கும் CCTV காட்சி…!

By Swetha on புரட்டாதி 5, 2026

Spread the love

லூதியானாவில் 15 வயது சிறுவன் வான்ஷ் நீச்சல் குளத்தில் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 29 அன்று தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்திற்குச் சென்ற வான்ஷ், நீந்தி முடித்த பிறகு நண்பர்களுடன் குளத்தின் கரையில் அமர்ந்திருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.

சிசிடிவி காட்சிகளின்படி, வான்ஷ் கரையில் அமர்ந்திருந்தபோதே அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்துள்ளது. அவர் வாந்தி எடுத்துக்கொண்டே ஒருபக்கமாகச் சாய்ந்து மயங்கி விழுந்துள்ளார். இதைக் கண்டு பதறிய அவரது நண்பர்கள் உடனடியாக அவரைத் தூக்க முயன்றனர்.

   

https://twitter.com/TV9Telugu/status/2096161983145885787/video/1

   

வான்ஷிடம் எந்தவொரு அசைவும் இல்லாததால், மற்ற நண்பர்களையும் உதவிக்கு அழைத்துள்ளனர். அவரைப் பிழைக்க வைக்க நண்பர்கள் உடனடியாக நெஞ்சுப் பகுதி அழுத்தச் சிகிச்சை அளித்து தீவிர முயற்சி செய்தனர். எனினும், அந்த முயற்சிகள் பலனளிக்காமல் வான்ஷின் உயிர் பரிதாபமாகப் பிரிந்தது.