“என் பொண்டாட்டியை விட அதுதான் முக்கியம்…” காதல் மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கனிமேர்கா கிராமத்தைச் சேர்ந்த புங்கா சந்தியா (23), ராம் முத்யாலா என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

குடும்பத்தில் ஏற்பட்ட பண நெருக்கடியால், சந்தியாவை அவரது பெற்றோர் வீட்டிலிருந்து கூடுதல் பணம் வாங்கி வருமாறு முத்யாலா ராவ் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தி வந்துள்ளார். சந்தியாவின் தாயாரும் பலமுறை பண உதவி செய்தபோதிலும், முத்யாலா ராவின் பண ஆசை தீரவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி சந்தியா வீட்டின் உள்ளே சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

   

சந்தியாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது மூக்கு மற்றும் வாயை பலவந்தமாக அழுத்தியதால் ஏற்பட்ட மூச்சுத்திணறலால் தான் அவர் உயிரிழந்தார் எனத் தெரியவந்தது. இதையடுத்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், “பொண்டாட்டியை விடப் பணம் தான் முக்கியம்” எனக் கூறி மனைவியைக் கொலை செய்ததை முத்யாலா ராவ் ஒப்புக்கொண்டார். தப்பியோட முயன்ற அவரைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.