சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவரும் முதலமைச்சர் விஜயின் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத் துறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டு, மாளிகையின் 10-வது தளத்தில் அதிநவீன வசதிகளுடன் முதலமைச்சரின் புதிய அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் அறைகளும் இங்கு மாற்றப்பட உள்ள நிலையில், அமைச்சர்களின் அறைகள் ஒவ்வொன்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. கோட்டையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதன்மை கட்டடத்தைப் பழமை மாறாமல் பராமரித்துப் புதுப்பிக்கும் பணிகளுக்காகவே இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
