“அடச்சீ…” அரசு பள்ளியில் நேர்ந்த கொடுமை… பெண் ஆசிரியருக்கு பாதுகாப்பு இல்லையா?… தொடர் பாலியல் தொல்லை… கையும் களவுமாக சிக்கிய தலைமை ஆசிரியர்… பகீர் சம்பவம்…!

By Visaka on ஆவணி 1, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரிய கோவிலாங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்து வந்த பஞ்சராஜ், அதே பள்ளியில் பணியாற்றும் பெண் ஆசிரியைக்கு நேரில் மற்றும் தொலைபேசி வாயிலாகத் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இவரின் தொடர் தொந்தரவுகளால் மன உளைச்சலுக்கு ஆளான பாதிக்கப்பட்ட ஆசிரியை, இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் காவல் நிலையத்தில் தைரியமாகப் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி, பஞ்சராஜ் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். சக ஆசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்யப்பட்டுள்ள இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே மற்றும் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.