“ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த எம்பிக்களின் வாரிசுகள்”…. திமுக கூடாரத்தை காலி செய்யும் விஜய்…. ஒரே நாளில் அதிர்ந்த அறிவாலயம்..!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

திமுகவின் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகம் நோக்கித் தங்களது அரசியல் பாதையை மாற்றி வருவது, அக்கட்சியின் தலைமைக்குக் கடுமையான கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திமுக எம்பி திருச்சி சிவாவின் மகள் காயத்ரி தவெகவில் இணைந்ததைத் தொடர்ந்து, நேற்று ஒரே நாளில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், திமுக இலக்கிய அணி செயலாளராக இருந்த வி.பி.கலைவாணன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி ஆகியோர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்கள் அனைத்தும் திமுக தலைமை மீது தங்களுக்கு இருக்கும் ஆழமான அதிருப்தியின் வெளிப்பாடே என்று விலகியவர்கள் வெளிப்படையாகவே தங்களது குமுறல்களைப் பகிர்ந்து வருவது தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.