உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு, புதிய இருசக்கர வாகனம் வாங்க ரூ.50,000 மானியம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம்கள், பேஷ்இமாம்கள், ஆலிம்கள் மற்றும் அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்டோர் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துப் பயன்பெற தகுதியானவர்கள் ஆவர்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பயனாளிகள், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து, வரும் ஜூன் 30, 2026-க்குள் அதே அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினரின் இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இஸ்ரேல் பிரதமர்…
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் நிறுத்த நீட்டிப்பு மற்றும் அமைதி உடன்பாட்டை எட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில்…
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நேரில்…
கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் தொடர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த…
அகமதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர், திருச்சி,…