சுப்பிரமணியம் பட பிரபலம் மொக்கச்சாமி இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?.. மன வருத்தத்துடன் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி..!

By Nanthini on சித்திரை 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் அற்புதப் படைப்புகளில் ஒன்று என கூற சுப்பிரமணியபுரம் திரைப்படத்திற்கு எப்போதும் தனி ஒரு இடம் உண்டு. அந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்கள் இன்றளவும் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த படத்தில் நடிகர் சசிகுமார் உடன் இணைந்து ஜெய், சுவாதி, சமுத்திரகனி மற்றும் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை சசிகுமார் இயக்கி இருந்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் மொக்கச்சாமி. மொக்கச்சாமி என்ற ஊர் பெரிய மனுஷன் ஆக நடித்திருந்தார்.

படம் பாத்துட்டு பொண்டாட்டி ஒரு வாரம் என்கூட பேசவே இல்ல!" - 'சுப்ரமணியபுரம்' முருகன்! | Humans of Madurai: Subramaniapuram actor Murugan talks about his experiences in acting - Vikatan

   

அவ்வளவு இறுதியில் இவரை யாரும் மறந்து விட முடியாது. சுத்த பத்தமா தானே இருக்க யாரும் புலன்களையே என்று இவர் பேசும் வசனம் படத்தில் பெரும் ஹிட் ஆனது. மதுரை மாட்டுத்தாவணியை சேர்ந்த இவருடைய பெயர் முருகன். இவர் மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மார்க்கெட்டில் இலை கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சினிமாவுல எத்தனை வருஷமா நடிச்சு எனக்குன்னு சொந்தமா எதையுமே சேர்த்து வைக்க முடியல. சம்பாதிச்ச படம் எல்லாம் செலவுக்கு மட்டும் தான் சரியா இருந்துச்சு. எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட இல்ல. எனக்கு மொத்தம் ஐந்து பெண் பிள்ளைகள்.

   

Ananthapuram 1980 Movie Muni Swamy Comedy Scene || Swati, Jai, Sasikumar

 

 

அவர்களைப் படிக்க வைத்து கல்யாணம் பண்ணி வைப்பதற்கே என்னுடைய வருமானம் சரியாக இருந்தது. சொந்தமா ஒரு இலை கடை நடத்தி வந்தேன். அதையும் நான் இப்ப இன்னொருத்தருக்கு வித்துட்டேன். இடையில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் ஆஞ்சியோ சிகிச்சை பண்ணாங்க. அதற்கு கூட என்னுடைய பெண் பிள்ளைகள் தான் செலவு செஞ்சாங்க. கொஞ்ச காலம் சினிமாவுல நடிச்சதுக்கு அப்புறம் சில புரொடியூசர் போன் பண்ணி என்ன நடிக்க கூப்பிட்டாங்க. சம்பளத்தை மட்டும் கொஞ்சம் உயர்த்தி கேட்டதால் கேட்டுட்டு சொல்றேன் என்று சொல்லிட்டு அதுக்கப்புறம் நடிக்கவே கூப்பிடல. என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே சசிகுமார் தான். அவர் இன்னைக்கு நல்ல ஒரு இடத்தில நடிச்சிட்டு இருக்காரு. அவர பத்தி என்கிட்ட நிறைய பேர் தப்பு தப்பா சொல்லி கொடுத்துட்டாங்க. அதேபோல தான் அவர் கிட்டயும் என்ன பத்தி வேறு விதமான நிறைய பேர் சொன்னதால் அவரும் என் மீது வெறுப்பில் இருந்தாரு.

இருந்தாலும் அவருக்கும் எனக்கும் எதுவும் பெரிதா சண்டை எல்லாம் கிடையாது. இப்போ அவர் நல்ல இடத்துல நல்லா இருக்காரு. அதுல எனக்கு ரொம்ப சந்தோசம் தான். இப்பவும் வாடகை வீட்டில ரொம்ப கஷ்டத்துல தான் இருக்க. இன்னைக்கும் அவர் நடிக்க கூப்பிட்டா நான் போறதுக்கு தயாரா இருக்கேன். இருந்தாலும் என்னுடைய பெண் பிள்ளைகள் நீங்க எந்த வேலையும் பார்க்க வேண்டாம் நாங்க உங்களைப் பார்த்துக் கொள்கிறோம் வீட்டிலேயே இருங்க என்று சொல்றாங்க. சினிமாவில் நடிச்சதுக்கு அப்புறம் கொஞ்ச காலம் அரசியலிலும் பயணித்தேன். தற்போது எதிலும் ஈடுபடாமல் குடும்பம் மற்றும் பேரப்பிள்ளைகள் என மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். இருந்தாலும் வறுமை வாட்டி வதைக்கிறது. அதற்காக சினிமாவில் நடிக்கலாமா என்ற எண்ணமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என முருகன் பேசியுள்ளார்.