பிரபு ஒரு அப்பாவி.. எனக்கு எப்படி அவர் பொண்ணு கொடுத்தார்னு தெரியல.. மாமனார் பற்றி இயக்குனர் ஆதிக் ஓபன் டாக்..!

By Nanthini on சித்திரை 12, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் இயக்குனர் தான் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் திரிஷா இல்லனா நயன்தாரா என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அந்தத் திரைப்படம் சுமாரான வரவேற்பை மட்டுமல்லாமல் பெரிய சர்ச்சையையும் சந்தித்திருந்தது. அதன் பிறகு சிம்புவை வைத்து அன்பானவன், அடங்காதவன் மற்றும் அசராதவன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதில் தமன்னா உள்ளிட்டோர் சிம்புவுடன் நடித்திருந்தனர். ஆனால் இந்த திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஆதிக்க ரவிச்சந்திர இயக்கிய முதல் இரண்டு திரைப்படங்களுமே பஞ்சாயத்தை சந்தித்தன.

மீண்டும் இணைகிறது அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி! | Ajith - Adhik  Ravichandran alliance reunites - hindutamil.in

   

இப்படியான நிலையில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோரை வைத்து மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை ஆதிக் இருந்தார். டைம் டிராவல் முறையில் உருவாகி இருந்த இந்த திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் சக்கை போடு போட்டது. திரைப்படம் மொத்தம் 100 கோடி ரூபாயை வசூலித்திருந்தது. விஷாலின் சினிமா கேரியரில் இதுதான் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூலித்த திரைப்படமாகும். இதனிடையே அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் ஆதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் அந்த சமயத்தில் தன்னிடம் இருந்த ஒன் லைனை அஜித்திடம் சொல்ல அதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டார்.

   

வாழ்த்து மழையில் ஆதிக் ரவிச்சந்திரன் - ஐஸ்வர்யா தம்பதி | nakkheeran

 

இதனைத் தொடர்ந்து அந்த ஒன் லைனை டெவலப் செய்து குட் பேட் அக்லி படத்தின் கதையையும் ஆதிக் எழுதி முடித்து விட்டார். இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா மற்றும் அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன்திடம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படியான நிலையில் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்த நிலையில் தன்னுடைய மாமனார் பிரபு குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ள விஷயம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், என்னுடைய மாமனார் பிரபு ரொம்பவே இனிமையானவர்.

ஆதிக் ரவிச்சந்திரன் - தமிழ் விக்கிப்பீடியா

அவர் ரொம்பவே அப்பாவியான நபர். பிரபு சார் உடைய பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் உள்ள ஒரு அப்பாவி தனத்தை வேறு யாரிடமும் பார்க்க முடியாது. நான் அவருடைய மருமகன் என்ற விஷயத்தை சில நேரங்களில் மறந்து விடுவேன். மிகப்பெரிய இடத்தில் இருக்கிற அவர் ரொம்ப ஸ்வீட்டா என்ன அவரோட மாப்பிள்ளை ஏத்துக்கிட்டாரு. நான் அவரை சந்திக்கும்போது மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாகல. படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் சாரை சந்தித்தேன். பிரபு சாரை போலவே ஆண்டியும் ரொம்ப ஸ்வீட். எந்த நம்பிக்கையில சார் எனக்கு ஓகே சொன்னீங்க என்று நான் நிறைய முறை கேட்டிருக்கிறேன். அஜித்தின் இந்த படத்துல அவர் நடிச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அஜித் சார் கூட ரொம்ப நாளைக்கு பிறகு அவர் நடிச்சதால அவருமே ரொம்ப சந்தோஷமாய் இருந்தாரு. அஜித்துக்கும் பிரபுவை ரொம்ப பிடிக்கும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.