கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் லாரி மோதி மூன்று பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து மாணவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
