“அட கடவுளே… 12 மணி நேர படிப்பு போச்சு… கேமரா முன்னாடி அழ விருப்பமில்லை… தேர்வு முறைகேட்டால் வீதியில் இறங்கிய மாணவி… நெஞ்சை உலுக்கும் வீடியோ…!”

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

ஜார்ட் கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்ற அரசுப் பணி நியமனத் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில், பெண் மாணவி ஒருவர் பேசிய உணர்ச்சிப்பூர்வமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அம்மாணவி தனது படிப்பு அட்டவணையை ஊடகங்களிடம் காண்பித்து, தினசரி 9 முதல் 12 மணி நேரம் வரை படிக்க வேண்டிய நேரத்தில், இப்போராட்டத்தில் பங்கேற்பதால் படிப்பு நேரம் வீணாகி வருவதாகவும், தங்களுக்கு வேறு ‘பிளான் பி’ வாய்ப்புகள் எதுவும் இல்லை என்றும் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தேர்வுகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் பதற்றமும் மன அழுத்தமும் ஏற்படுவதாகக் கூறிய அம்மாணவி, இதனால் முந்தைய நாள் 7 மணி நேரம் மட்டுமே படிக்க முடிந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்வுக்காகப் பெற்றோர் தங்களை தொலைதூர மையங்களுக்கு அழைத்துச் செல்லும் சிரமங்களை எடுத்துரைத்த அவர், கேமரா முன் அழ விரும்பவில்லை என்றும், மத்திய மற்றும் மாநில அளவிலான தேர்வு முறைகளில் உள்ள குறைபாடுகளையும் முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்துள்ளார்.

   

https://www.instagram.com/reel/DbmjWPqpX-7/?utm_source=ig_web_button_share_sheet

   

ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா மைதானத்தில் JPSC மற்றும் JSSC CGL தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து சுதந்திரமான சிபிஐ விசாரணை அமைக்க வேண்டும் என்றும் நியாயமான தேர்வு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தத் தொடர் போராட்டங்கள் தொடர்பாக உரிய நேரத்தில் அரசு தகுந்த முடிவை எடுக்கும் என்று முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.