அச்சோ… நொடிப் பொழுதில் அதிசயம்… மருத்துவமனை கேட் அருகே பைக் மீதே பிறந்த குழந்தை… இணையத்தை கலக்கும் சூப்பர் அம்மாவின் வைரல் வீடியோ…!

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

வியட்நாமில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில், பெண் ஒருவருக்கு இருசக்கர வாகனத்திலேயே குழந்தை பிறந்த அதிர்ஷ்டகரமான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையின் நுழைவாயிலை அடைந்த சில விநாடிகளிலேயே, வாகனத்தில் அமர்ந்திருந்த நிலையிலேயே அப்பெண்ணுக்குப் பிரசவ வலி தீவிரமடைந்து, நொடிப் பொழுதில் குழந்தை பிறந்தது.

இந்த அவசர நிலையைக் கண்ட மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக ஓடிவந்து அவருக்கு உதவினர். சாலையிலேயே தேவையான முதலுதவிகளைச் செய்து, தாயையும் புதிதாகப் பிறந்த குழந்தையையும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றனர். இந்த அரிய நிகழ்வை அங்கிருந்த சிலர் படம்பிடித்துச் சமூக வலைதளங்களில் பகிர, அது இணையத்தில் காட்டுத்தீ போலப் பரவியது.

   

https://www.instagram.com/reel/Dbpj4d8srQE/?utm_source=ig_web_button_share_sheet

   

சற்றும் எதிர்பாராத இந்தச் சூழலில் பிரசவம் நடந்தபோதிலும், தாயும் குழந்தையும் முற்றிலும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சிக்கலான நேரத்தில் விரைவாகச் செயல்பட்டு தாயையும் சேயையும் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரின் கூர்மையான செயல்பாட்டை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.