அட கொடுமையே… குடிநீர் கேட்ட வாடிக்கையாளர்… இது என்ன உன் அப்பன் கடையா?… என மிரட்டிய ஊழியர்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ… கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

By Swetha on ஆவணி 5, 2026

Spread the love

சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில், பர்கர் கிங் உணவக ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு குடிநீர் வழங்க மறுத்து, அவரிடம் கடுமையாகப் பேசிய நிகழ்வு இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “இது உன்னுடைய அப்பாவின் கடையா?” போன்ற தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி அந்த ஊழியர் பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ள

இந்த வீடியோ பரவியதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியரின் மோசமான வாடிக்கையாளர் சேவை மற்றும் மரியாதையற்ற குறித்து இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அடிப்படைத் தேவையான தண்ணீரைக் கூட தர மறுத்து, வாடிக்கையாளரிடம் இவ்வளவு கோபமாகவும் அநாகரிகமாகவும் நடந்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

   

இச்சம்பவம் பர்கர் கிங் நிறுவனத்தின் பெயர் மற்றும் வாடிக்கையாளர் சேவைத் தரத்தின் மீது பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது. இது போன்ற ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வாடிக்கையாளர்களை எவ்வாறு கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதற்கான முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.