சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த உதயசங்கர் என்பவரின் 16 வயது மகன் திரூஸ், தனது தாயின் பிரிவைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரூஸ், பெரம்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்ததுடன், சிலம்பம், கராத்தே போன்ற கலைகளில் தேர்ச்சி பெற்று தேசிய அளவில் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
திரூஸின் தாயார் நிஷாந்தி, இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 24ஆம் தேதி உயிரிழந்தார். அன்று முதல் திரூஸ் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டதுடன், அடிக்கடி தாயைப் பார்க்க வேண்டும் என்று தந்தையிடம் அழுதுள்ளார். சம்பவத்தன்று இரவு, திரூஸின் தந்தை பணிக்குச் சென்ற நிலையில், திரூஸ் தனது தங்கை ஹர்ஷிதாவை டியூசனுக்கு அனுப்பிவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு 9 மணிக்கு ஹர்ஷிதா திரும்பி வந்து கதவைத் தட்டியபோது, கதவு திறக்கப்படவில்லை.
பின்னர் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, திரூஸ் தனது தாயின் புடவையால் மின்விசிறியில் தூக்கிட்டு மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவர் இறந்துவிட்டது உறுதியானது. இதுகுறித்து கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…