நந்தியால மாவட்டம் கொத்தப்பள்ளி கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயாவில் இடைநிலை முதலாண்டு படித்து வந்த பவ்யா என்ற மாணவி, தங்கும் விடுதி கழிப்பறையில் ஃபினாயில் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து காவல்துறை தற்கொலை கடிதம் ஒன்றைக் கைப்பற்றியுள்ளது.
இந்த விவகாரத்தில் கல்வித்துறையும், விடுதி நிர்வாகமும் உண்மைகளை வெளியே தெரியவிடாமல் ரகசியமாக மூடி மறைக்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதே விடுதியில் தங்கியிருந்த இரு மாணவிகளுக்கு இடையேயான காதல் விவகாரமே இந்தத் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
https://twitter.com/RTVnewsnetwork/status/2102620106841010423/video/1
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கைப்பற்றப்பட்ட தற்கொலை கடிதத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் தீவிர முடிவிற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் விசாரணை முடிவிலேயே முழுமையாகத் தெரியவரும்.
