சஞ்சல்குடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரிமாண்ட் கைதியான கிஷோர் குமார் ரெட்டி, சிகிச்சைக்காக எர்ரகட்டா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்றார்.
மருத்துவமனையிலிருந்து தப்பிய அவர், வனபர்த்தி மாவட்டம் அமரசிந்தா மண்டலத்தில் உள்ள தனது சொந்த கிராமமான நந்திமல்லக்கிற்குச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
அங்கு ரோந்து வந்த காவல்துறையினரைக் கண்டதும் தீவிர பயமும் பதற்றமும் அடைந்த கிஷோர் குமார், அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஏரிக்கரையில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பும் இவர் மாவட்ட சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
