ஐயோ பாவம்… விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற… 3 பேர் ஆற்றில் மூழ்கி மாயம்… கதறும் குடும்பம்… லக்னோவின் பதறவைக்கும் சம்பவம்…!

By Swetha on புரட்டாதி 24, 2026

Spread the love

லக்னோவின் மோஹன்லால்கஞ்ச் அருகே உள்ள ஜபரேலா பாலம் பகுதியில், செவ்வாய்க்கிழமை மாலை கணேச விசர்ஜனத்திற்காக சாய் நதிக்குச் சென்ற தீரஜ் (35) என்பவர் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கத் தொடங்கினார். அவரைக் காப்பாற்ற ஹரிபிரசாத் (40) மற்றும் பிரமோத் (22) ஆகிய இருவர் அடுத்தடுத்து ஆற்றில் குதித்த நிலையில், மூவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இவர்கள் அனைவரும் 5 கி.மீ தொலைவில் உள்ள சிசேண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் ஆற்றில் மூழ்கிய மூவரையும் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, நதிக்கரையில் பெருந்திரளான மக்கள் கூடினர்.

   

காணாமல் போனவர்களின் குடும்பத்தினரும் நதிக்கரையில் சோகத்துடன் காத்திருக்கின்றனர்; இதில் இருவரின் மனைவிகள் கர்ப்பிணிகளாக உள்ளனர். இருப்பினும், மீட்புக் குழுவினர் ஒரே இடத்தில் மட்டுமே தேடுதல் வேட்டையை நடத்துவதாகவும், இதனால் அவர்கள் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவதாகவும் அப்பகுதியில் உள்ள குடும்பத்தினரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.