விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மைலி இலுப்பைக்குளம் கிராமத்தில் வசிப்பவர் பாண்டி. இவருடைய மகன் செந்தில்குமார். 18 வயதான இவர் அரசு ஐடிஐ யில் மெக்கானிக்கல் படித்து வந்தார். இவருக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகை வந்த நிலையில் அந்த பணத்தை சேமித்து வைத்து செம்மறி ஆடு ஒன்றை வாங்கி வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கனமழையால் அந்த ஆடு இறந்து போனது.
தான் ஆசை ஆசையாக வளர்த்த ஆடு இறந்ததால் செந்தில்குமார் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் திடீரென்று விபரீத முடிவு எடுத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் .ஆனால் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆடு இறந்த துயரத்தில் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
