உங்க போனில் இது மாதிரி வீடியோ வருதா?… கிளிக் பண்ணா மொத்தமும் காலி… சைபர் கிரைம் எச்சரிக்கை…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் ஏராளமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு என்னதான் எச்சரிக்கை விடுத்து வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது புதுவிதமான மோசடி ஒன்று அரங்கேரி கொண்டிருக்கிறது. அதாவது

இன்ஸ்டாகிராம் மற்றும் X தளத்தில் கடந்த சில நாட்களாகவே 19 நிமிட ஆபாச வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு அல்லது டீப்பேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவில் உள்ள நபர்கள் யார் என்று உறுதியாக தெரியாததால் சமூக ஊடகப் பயனர்கள் ஆவணமற்ற ஆதாரங்களின் அடிப்படையில் பல பெண்களை தவறாக அடையாளம் கண்டு குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் அந்த வீடியோவின் இணைப்பை கிளிக் செய்யும் பயனர்கள் மீது சைபர் குற்றவாளிகள் Malware ஐ ஏவி அவர்களின் வங்கி தகவல்களை திருட முயற்சிப்பதாக இணைய பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.