“மன்னிச்சிருங்க அம்மா, அப்பா…! அடுத்த ஜென்மத்தில் உங்களுக்காக…” மாணவர் எழுதிய உருக்கமான கடிதம்… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. கதறும் குடும்பத்தினர்…!!

Spread the love

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள கண்டாலா கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான சூரஜ் சுபாஷ் ஷிண்டே என்ற இளைஞர், நீட் தேர்வில் எதிர்பார்ப்பை விடக் குறைவான மதிப்பெண்களைப் பெற்றதால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளாகி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் கிராமத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த வேளையில், சூரஜ் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், “மன்னித்து விடுங்கள் அம்மா, அப்பா! அடுத்த ஜென்மத்தில் உங்களுக்காக நான் கண்டிப்பாக மருத்துவராக மாறிக் காட்டுகிறேன், உடலையும் ஆரோக்கியத்தையும் கவனித்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு வைஜாபூர் துணை மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வைஜாபூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்து சிதறிய பவர் பேங்க்…” புகையால் அலறியடித்து தெறித்து ஓடிய பயணிகள்… பகீர் சம்பவம்…!!

மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது, சார்ஜ் போடப்பட்டிருந்த பவர் பேங்க்…

18 minutes ago

“திடீரென குறுக்கே வந்த கார்…” அதிவேகமாக மோதி நொறுங்கிய கோர விபத்து… இணையத்தில் வைரலாகும் திக் திக் வீடியோ…!!

துருக்கி நாட்டின் அர்னவுத்கோய் பகுதியில், சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் பயங்கரமாக…

26 minutes ago

பெற்றோர்களே உஷார்!… ஒரு கல்லடிக்கு ரூ. 20 லட்சம் அபராதம்?… பள்ளி மாணவர்கள் அட்டகாசம்… பெற்றோர்களை குறிவைக்கும் விசித்திர சட்டம்…!!

பிரான்ஸ் மற்றும் இத்தாலி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கல்வித் துறைக்கான நிதி குறைப்பு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, போதிய உள்கட்டமைப்பு…

31 minutes ago

“அம்மான்னா சும்மாவா…?” மகளை நோக்கி ஓடி வந்த நாய்… துணிச்சலாக வந்து காப்பாற்றிய தாய்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

சீனாவில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில், சிறுமி ஒருவரை நோக்கிப் பாய்ந்து வந்த நாய் தாக்குதல் நடத்த முயன்ற போது,…

36 minutes ago

“மழையில நனைய கூடாதுடா!”… நடுரோட்டில் கொட்டும் மழை… குடை பிடித்த நண்பன்… மரணத்திலும் பிரியாத நட்பு… நெஞ்சை உலுக்கும் காட்சி…!!

செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரமாக வசித்து வந்த முதியவர் ஒருவர், இரவில் வழக்கம் போல் படுத்திருந்தபோது, அவ்வழியே…

40 minutes ago