செங்கல்பட்டு மாவட்டம் மகாலட்சுமி நகர் பகுதியில் சாலையோரமாக வசித்து வந்த முதியவர் ஒருவர், இரவில் வழக்கம் போல் படுத்திருந்தபோது, அவ்வழியே வந்த கார் ஒன்று பின்னோக்கி எடுக்கப்பட்டதில் அவர் மீது எதிர்பாராதவிதமாக ஏறி இறங்கியது. இதில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து உடனடியாகத் தப்பிச் சென்றார்.
நண்பன் உயிரிழந்ததைக் கண்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த அருகிலிருந்த மற்றொரு முதியவர் கதறி அழுதார். அச்சமயம் பலத்த மழை பெய்து கொண்டிருந்ததால், தன் நண்பரின் உடல் மழையில் நனைந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் சாக்குப்பைகள் மற்றும் மழைக்கோட்டை உடலின் மீது போர்த்தி மூடினார். அத்துடன் நிற்காமல், சடலத்தின் மீது மழைநீர் படாதவாறு நீண்ட நேரம் குடையைப் பிடித்தபடியே அமர்ந்திருந்தது அவ்வழியே சென்ற அனைவரையும் கண்கலங்க வைத்தது.
இந்த உருக்கமான சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் தப்பியோடிய கார் ஓட்டுநரைக் கண்டறியும் பணியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணண்ட அள்ளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனார் மீது மருமகன் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளார். குடும்பப்…
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்த அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளுக்கு அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக…
கிழக்கு டெல்லியின் கிருஷ்ணா நகர் பகுதியில், வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த 6 மாத தெருநாய் குட்டியை தந்தை மற்றும் மகன்…
தெருவோரத்தில் பக்கவாதம் தாக்கியது போல நடித்து யாசகம் பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், அவருக்கு ஊசி மூலம் சிகிச்சை அளிக்க…
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வளாகம் மற்றும் மாட வீதிகளில், சமீப காலமாகச் சில…
உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான ஆஷியா என்ற இளம்பெண், லக்னோவின் துபாகா புறவழிச்சாலை அருகேயுள்ள அடர்ந்த புதரில் மர்மமான…