மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது, சார்ஜ் போடப்பட்டிருந்த பவர் பேங்க் திடீரென வெடித்துச் சிதறி புகையால் ரயில் பெட்டி சூழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பண்டமுண்டா மின்சார ஷெட் அருகே சனிக்கிழமை அதிகாலை 3.38 மணியளவில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, B-3 ஏசி கோச்சின் 6-வது பர்த்டில் சார்ஜ் ஆகிக்கொண்டிருந்த பவர் பேங்க் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்தது.
நொடிப்பொழுதில் ரயில் பெட்டி முழுவதிலும் அடர்ந்த புகை பரவியதை அடுத்து, அவசரத் தீ எச்சரிக்கை மணி ஒலித்து பயணிகள் அலறியடித்து ஓட தொடங்கினர். உடனே துரிதமாகச் செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 15 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டுப் பின்னரே தனது பயணத்தைத் தொடர்ந்தது.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவலின்படி, டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் முதலமைச்சரின் பெயரைக் கொண்டவருமான அதிமுக எம்எல்ஏ…
பள்ளிப் பருவத்தில் தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில், மாணவர் ஒருவர் வகுப்பறையிலேயே ஆசிரியையிடம் வன்முறையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும்…
சென்னை மாங்காடு அடுத்த கோவூரில், 'அனைத்து நண்பர்கள் கழகம்' சார்பில் நடிகர் அஜித்திற்கு சிலை திறக்கப்பட்டுள்ள சம்பவம் சினிமா மற்றும்…
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,…
ஹைதராபாத் சந்திர நாயக் தாண்டா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிப் பணியாற்றி வந்த 29 வயதான பெண் மென்பொறியாளர்…
லஞ்ச ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷை, உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் நேரில்…