“எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடித்து சிதறிய பவர் பேங்க்…” புகையால் அலறியடித்து தெறித்து ஓடிய பயணிகள்… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

மும்பை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சில் அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்த போது, சார்ஜ் போடப்பட்டிருந்த பவர் பேங்க் திடீரென வெடித்துச் சிதறி புகையால் ரயில் பெட்டி சூழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின் பண்டமுண்டா மின்சார ஷெட் அருகே சனிக்கிழமை அதிகாலை 3.38 மணியளவில் ரயில் சென்றுகொண்டிருந்தபோது, B-3 ஏசி கோச்சின் 6-வது பர்த்டில் சார்ஜ் ஆகிக்கொண்டிருந்த பவர் பேங்க் திடீரெனப் பயங்கர சத்தத்துடன் வெடித்துத் தீப்பிடித்தது.

நொடிப்பொழுதில் ரயில் பெட்டி முழுவதிலும் அடர்ந்த புகை பரவியதை அடுத்து, அவசரத் தீ எச்சரிக்கை மணி ஒலித்து பயணிகள் அலறியடித்து ஓட தொடங்கினர். உடனே துரிதமாகச் செயல்பட்ட ரயில்வே ஊழியர்கள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் பயணிகளுக்கு எவ்விதக் காயமும் ஏற்படவில்லை என்றாலும், சுமார் 15 நிமிடங்கள் ரயில் நிறுத்தப்பட்டுப் பின்னரே தனது பயணத்தைத் தொடர்ந்தது.