“எனக்கும் கார், பைக் வாங்கி தா…” நடுரோட்டில் மனைவியை அடித்து மிதித்த கணவர்… தலைமுடியை பிடித்து கொடூரத் தாக்குதல்… இணையத்தை அதிர வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 26, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், தன் மனைவி தார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் வாங்கித் தர மறுத்ததால், கணவனே மனைவியை நடுரோட்டில் தலைமுடியைப் பிடித்து இழுத்து வந்து காலால் மிதித்துக் கொடூரமாக தாக்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. லூதியானா ஜாசியன் சாலையில் உள்ள கிரீன் என்ஹிளேவ் பகுதியைச் சேர்ந்த ரிதிஷ் சர்மா (29) என்ற நபர், தன்னை விட அதிகமாகச் சம்பாதிக்கும் தனது மனைவி ட்விங்கிளிடம் புதிய தார் காரும் பைக்கும் வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார்.

தனது நண்பர்கள் அனைவரிடமும் தார் கார் இருப்பதாகக் கூறி அவர் வரதட்சணை மிரட்டல் விடுத்த நிலையில், அதற்கு மனைவி சம்மதிக்காததால் ஆத்திரமடைந்த ரிதிஷ், வீட்டின் வெளியே வைத்து மனைவியை வீதியில் இழுத்துவந்து கைகளாலும் கால்களாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். அண்டை வீட்டார் தடுத்து நிறுத்த முயன்றபோதும் அவர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஹைபோவால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.