ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருந்த தமிழக வெற்றித் கழக தலைவர் விஜய்யின் பயணம், உளவுத்துறை மற்றும் காவல்துறையின் பாதுகாப்பு எச்சரிக்கையைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இவ்விழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பசும்பொன் செல்லும்போது ஏற்படும் அதிகப்படியான கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், அதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கக் கூடும் என உளவுத்துறை மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஆலோசனையையும் எச்சரிக்கையையும் ஏற்றுக்கொண்டு, சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விஜய் தனது பசும்பொன் பயணத்தைத் தவிர்த்துள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்காக விவாதிக்கப்பட்டு வருகிறது.
