துருக்கி நாட்டின் அர்னவுத்கோய் பகுதியில், சாலையின் குறுக்கே திடீரென நுழைந்த கார் மீது அதிவேகமாக வந்த மற்றொரு கார் பயங்கரமாக மோதி நொறுங்கிய பதைபதைக்கும் விபத்துக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலையில் சென்றுகொண்டிருந்த காரின் குறுக்கே மற்றொரு வாகனம் சடாரென நுழைந்ததால், ஓட்டுநரால் பிரேக் பிடிக்க முடியாமல் அதிவேகத்தில் நேருக்கு நேர் மோதியது.
மோதிய வேகத்தில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பு வேலியில் பயங்கரமாக உரசிச் சென்றது. இதில் காரின் முன்பகுதி மற்றும் என்ஜின் அறை சுக்குநூறாக நொறுங்கிச் சேதமடைந்தது. இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருவர் மட்டுமே லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். விபத்தின் முழு வீடியோவும் அங்குள்ள கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவதே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்குக் காரணம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
