NDA கூட்டணிக்கு கூடும் பலம்… ஸ்ட்ராங்கான கட்சி வரப்போகுது… திடீர் பரபரப்பை கிளப்பிய வானதி சீனிவாசன்..!!

By Soundarya on ஐப்பசி 14, 2025

Spread the love

தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் விஜய்க்கு எதிராக பலரும் விமர்சித்து வந்தனர் இந்த விவகாரத்தை கையிலெடுத்து விஜய்யை தங்கம் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இனி ஸ்ட்ராங்கான ஆளுங்க வரப்போறாங்க. NDA  கூட்டணி ரொம்ப ஸ்ட்ராங்கா போகுது என்று தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் விஜய்யின் தவெக இணையவுள்ளதாக பேசப்பட்டு வரும் நிலையில், வானதியின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.