சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியபோது சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் துரைமுருகனை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி, உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கடந்த மாதம் துறைமுறைகண் திடீரென மயங்கி விழுந்து, கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் பலரும் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். இந்த நிலையில், தேர்தல் பரப்புரையிலிருந்த நிலையில், இன்று எடப்பாடி துரைமுருகனை சந்தித்து பேசினார்.
