பாமகவில் சமீபகாலமாகவே தந்தை மற்றும் மகனுக்கு இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த பிரச்சினை எப்போது முடியும் என்று பாமக தொண்டர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதற்கிடையில் பாமக, சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து GK மணியை அன்புமணி நீக்கி அறிவித்திருந்தார். இது தொடர்பாக சபாநாயகரை சந்தித்து இன்று எம்எல்ஏக்கள் SP வெங்கடேஸ்வரன், சிவக்குமார், சதாசிவம் ஆகிய மூன்று பேரும் முறையிட்டனர். அதனை ஏற்க மறுத்த காரணத்தால் சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர்கள்.
இந்நிலையில்சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (அக்., 14) செய்தியாளர்களிடம் பேசிய பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, “பாமக நிறுவனர் ராமதாஸுக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையில் உள்ளோம். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு என்று குறிப்பிட்டார்.
