மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்குத் திரண்ட ஒரு தரப்பு கிராம மக்கள், “இதுவரை எங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள்? இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு வாக்கு கேட்க வருகிறீர்கள்? உள்ளே வராீர்கள்” எனக் கூறி பிரச்சாரத்திற்குச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
மேலும், தவெக வேட்பாளரின் கணவர் குமரவேலைச் சூழ்ந்துகொண்டு கிராம மக்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மரகதம் குமரவேல் தனது வாக்கு சேகரிப்புப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
