தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொந்தரவு என்பது அதிகரித்து வருகிறது. சாலையில் சாதாரணமாக நடந்து செல்லும் குழந்தைகளை கூட நாய்கள் விட்டு வைப்பது கிடையாது. வீட்டிற்கு வெளியே குழந்தைகளை விளையாட வைப்பதற்கு கூட பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். அந்த அளவிற்கு தற்போது தெருநாய்கள் தொந்தரவு என்பது அதிகரித்துவிட்டது. இதனால் ஏற்படும் பின்விளைவுகளும் ஏராளம். தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் தெரு நாய் கடித்து குதறியதில் காதின் ஒரு பகுதி துண்டாகி படுகாயம் அடைந்த நான்கு வயது சிறுமி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இரவு வீட்டின் வெளியே விளையாடிய சிறுமியின் உடல், தலை மற்றும் வயிறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய் கடித்து குதறியதாகவும், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த இரண்டு பேரையும் நாய் கடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…