குஜராத் மாநிலத்தில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளிலும் தெருநாய்கள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையுமே கடிக்கக்கூடிய சம்பவங்கள் நாளுக்கு நாள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு ஒரு எல்லையே இல்லையா என்ற யோசிக்கும் அளவுக்கு தான் இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குஜராத்தில் வீட்டில் வாசலில் பச்சிளம் குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்தது.
அங்கு வந்த நாய் குழந்தையின் கழுத்தில் கடித்தது. அதுமட்டுமல்லாமல் குழந்தையை கவ்விக் கொண்டு நாய் ஓடிய நிலையில் சத்தம் கேட்டு வந்த குழந்தையின் தந்தை நாயை துரத்திவிட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். குழந்தை வலி தாங்க முடியாமல் அலறிய சத்தம் காண்போரை கண் கலங்க வைக்கிறது. இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் கலங்க வைத்துள்ளது.
