அடுத்த 3 நாட்களுக்கு பேய் மழை வெளுத்து வாங்கப்போகுது… தமிழகத்திற்கு வந்த High அலர்ட்…!

By Nanthini on ஆவணி 7, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகின்றது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தென்இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும், நாளை மறுநாள் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.