#image_title
இன்று இளைஞர்கள் பெரும்பாலும் விவசாயத்தை விரும்புவதில்லை. கம்ப்யூட்டர் பணிகளையே விரும்புகிறார்கள். ஆனால் இளைஞர்கள் விவசாயம் செய்ய தொடங்கி விட்டால் நம் நாடு செல்வ செழிப்பாக மாறும் என்பது நிதர்சனமான உண்மை. அப்படி இளைஞர்களுக்கு எல்லாம் முன்மாதிரியாக விவசாயத்தை கையில் எடுத்து அதில் ஜெயித்தும் காட்டியுள்ளார் 25 வயதான இளைஞர்.
பஞ்சாப்பை சேர்ந்த 25 வயதான பட்டதாரி இளைஞர் அமந்திப் சிங். அவரது நிலத்தில் ஆர்கானிக் விவசாயம் செய்து பஞ்சாபிலேயே முக்கியமான வணிகத்தின் சின்னமாக இருக்கிறார். அவர் என்ன பயிர் இடுகிறார் என்ன செய்தார் என்பதை இனி விரிவாக காண்போம்.
அமந்திப் சிங் ஒரு நாள் தன் நண்பர்களோடு சுற்றுலா சென்ற போது அவர் ஓரிடத்தில் ஒரு பெரிய நிலப்பரப்பில் வித்தியாசமான செடிகளோடு ஒரு முதியவர் விவசாயம் செய்வதை பார்த்து அவரிடம் சென்று விசாரிக்க தொடங்கினார். அப்போது அந்த முதியவர், நான் டிராகன் ஃப்ரூட்டை விளைவிக்கிறேன். நகரங்களில் இந்த பழத்திற்கு பெரும் டிமாண்ட் இருக்கிறது. இந்த பழத்தை விளைவித்தால் கட்டாயம் நல்ல விலை போகும் என்று கூறியிருக்கிறார்.
அந்த முதியவர் சொன்னதை யோசித்துக்கொண்டே இருந்த அமந்திப் சிங் நாமும் ஏன் பஞ்சாபில் தனது சொந்த நிலத்தில் டிராகன் பழத்தை பயிரிடக் கூடாது என்று யோசித்தார். ஆனால் அவர் நினைத்தவுடன் எதுவுமே நடக்கவில்லை.
அமந்திப் சிங் குடும்ப விவசாயமானது வட இந்தியாவில் சந்தனம் தயாரிக்கும் மிகப்பெரிய தயாரிப்பாளர்கள் ஆகும். அதனால் அவரின் குடும்பத்தாரை டிராகன் ஃப்ரூட் விவசாயம் செய்வதை ஒத்துக்கொள்ள வைக்கவே அவருக்கு பெரும் போராட்டமாக இருந்தது. அப்படி அமந்திப் சிங் 2018 ஆம் ஆண்டு ‘சாராவோ எக்ஸிம் ஃபார்ம்’ என்ற பெயரில் அக்ரி ஸ்டார்ட் ஆப்பை தொடங்கினார்.
தனது குடும்பத்தாரிடம் பேசி தங்களுடைய ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொண்ட அமந்திப் சிங் அதில் 4 லட்சம் ரூபாய் முதலீடு செய்து டிராகன் ஃப்ரூட்டை பயிரிட மண்ணை தயார் செய்தார். எல்லாம் தயாரித்த பிறகு டிராகன் பழத்தை பயிரிட்ட அமந்திப் சிங்க்கு தோல்வியே மிஞ்சியது. முதல் அறுவடை, இரண்டாம் அறுவடை, மூன்றாம் அறுவடை, நான்காம் அறுவடை என நான்கு வருடங்கள் அவருக்கு தோல்வியே மிஞ்சின. அவரது டிராகன் ஃப்ரூட்டு பழங்கள் வரவில்லை ஏன் எதற்காக இப்படி ஆகிறது என்பதை யோசித்து அதற்கான ஆராய்ச்சியில் இறங்கினார் அமந்திப் சிங்.
பின்னர் ரசாயன உரங்களை உதறித் தள்ளிய அமந்திப் சிங் ஆர்கானிக் விவசாயத்துக்கு மாறினார். அவரது நிலத்தின் மண் ஏற்கனவே செழுமையாக இருந்ததால் இந்த ஆர்கானிக் உரங்களை சேர்த்தவுடன் அவருக்கு அது நல்ல பலனை தர ஆரம்பித்தது.
அடுத்த ஒன்றரை வருடத்தில் அவர் நினைத்தபடி டிராகன் ஃப்ரூட் பழங்கள் நல்ல விளைச்சலை தந்தன. அதன் பிறகு அமந்திப் சிங் பஞ்சாபில் டிராகன் ஃபுரூட் சப்ளை செய்யும் முன்னணி தயாரிப்பாளராக ஆனார். அதோடு நிறுத்தாமல் அமந்திப் சிங் அதிக வகைகளான 12 வகையான எக்ஸார்டிக் பழங்களை விவசாயம் செய்ய ஆரம்பித்தார். தற்போது அமந்திப் சிங் தனது நிலத்தின் மூலம் 15 லட்சம் சம்பாதிக்கிறார்.
இதைப் பற்றி கூறும்போது, நீங்கள் விவசாயத்தை தொடங்கும் போது எல்லாவற்றையும் கரெக்டாக செய்தால் பயிரிட்ட மறுஆண்டு உங்களுக்கு பிசினஸ் நல்ல முறையில் நடக்கும். டிராகன் ஃப்ரூட் நகரங்களில் மிகப்பெரிய வரவேற்பை கொண்டுள்ளது. அதனால் இதை பயிரிடுவதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். நாங்கள் வரும் காலத்தில் மஞ்சள் மற்றும் வெள்ளை டிராகன் ஃப்ரூட்டுகளை பயிரிடுவதற்கான ஆராய்ச்சிகளை தற்போது செய்து வருகிறோம். கடும் உழைப்பு, முயற்சி மற்றும் தோல்விக்கு பின்னரே என்னுடைய கனவு இன்று நனவாகியுள்ளது. நாங்கள் அடுத்ததாக விவசாயிகள் தயாரிப்பு ஆர்கனைசேஷன் ஒன்றை ஆரம்பிக்க உள்ளோம். இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவும். என்னை போன்ற மற்ற இளைஞர்களும் விவசாயத்தில் யோசிக்காமல் இறங்க வேண்டும். விவசாயத்திலும் நாம் நல்ல வருமானம் கண்டிப்பாக பார்க்கலாம். இதன் மூலம் நம் நாடு முன்னேறும் என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை அவனுடன் படிக்கும்…
தமிழக சட்டமன்றத்தில் இன்று உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர்…
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…
தமிழக அரசியலையும் திரைத்துரையையும் என்றும் பிரித்துப் பார்க்க முடியாது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் பல உள்ளன. கடந்த அரை நூற்றாண்டில்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலக்கவுண்டனூரைச் சேர்ந்த சிமெண்ட் செங்கல் வியாபாரி பூபதி என்பவர், வழிப்பறி கொள்ளையர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாகக்…
தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி பிரிட்டன்…