கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விபரங்களைக் கோரி கடந்த 2022-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். ஆனால், இந்த விண்ணப்பத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் உரிய முறையில் கையாளாமல், பள்ளிகளின் முதல்வர்களுக்கே திருப்பி அனுப்பியுள்ளனர். இரண்டரை ஆண்டுகளாகியும் உரிய தகவல் வழங்கப்படாததால், மன உளைச்சலுக்கு ஆளான மனுதாரருக்கு ₹25,000 இழப்பீடு வழங்குமாறு மாவட்ட கல்வி அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் அலட்சியமாகச் செயல்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய இருவரையும், வரும் ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.இளம்பரிதி உத்தரவிட்டுள்ளார். மேலும், மனுதாரர் கோரிய கட்டண விபரங்கள் அனைத்தையும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கல்வித் துறைக்குக் கெடு விதித்துள்ளார்.
மாணவர்களின் கல்விக் கட்டண விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட ஆணையம், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் விளம்பர பலகைகளிலும் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விபரங்களைக் கட்டாயமாக வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அத்துடன், மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவத்திலும் வகுப்பு வாரியான கட்டணங்களை அச்சிட்டு வழங்க வேண்டும் என்றும், இதனை உறுதி செய்து ஜூன் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு ஆணையம் ஆணையிட்டுள்ளது.
மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…
திஷா சாலியன் வழக்கு தொடர்பாகத் தொடரப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிவ் சேனா தலைவர் ஆதித்யா தாக்கரே தனது மௌனத்தைக்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…