“கடைசியில் இப்படி ஒரு பிளானா?”… தவெக-வுக்கு செக் வைக்க ஸ்டாலின் எடுத்த ஆபத்தான முடிவு… அறிவாலயத்தில் கசிந்த ரகசியம்…!

By Nanthini on புரட்டாதி 4, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் திமுக சுணக்கமடைந்துவிட்டது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொண்டர்கள் மத்தியில் தேக்கநிலையைப் போக்கி உற்சாகத்தை ஏற்படுத்தவுமே ஸ்டாலின் உள்கட்சித் தேர்தலை அறிவித்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பதவிகளுக்குக் கடுமையான போட்டி நிலவும்போது, கட்சி சுறுசுறுப்பாகவும் உயிரோட்டத்துடனும் இருப்பதை வெளிப்படையாகக் காட்ட முடியும் என்பதே தலைமையின் கணக்காக உள்ளது. மேலும், இந்தத் தேர்தல் களேபரங்களால் சில குழப்பங்கள் உருவானாலும் கூட, அதில் தங்களை நிரூபிக்கும் உழைப்பாளிகளையும், தலைமைக்குக் கட்டுப்படும் உண்மையான விசுவாசிகளையும் கண்டறிந்து களமிறக்க முடியும் என்றும் திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.