அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்ட K.A. செங்கோட்டையனின் துறை விரைவில் மீண்டும் மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, தொடக்கத்தில் அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. எனினும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அவர் மாறினார். தற்போது அத்துறையைக் கவனித்து வரும் நிலையில், மீண்டும் அவரை பழையபடி பள்ளிக்கல்வித்துறைக்கே மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதிமுக காலத்தில் பள்ளிக்கல்வித்துறையில் அவர் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்களும், நிர்வாக அனுபவமும் தவெக அரசின் கல்வி சார்ந்த திட்டங்களை விரைவுபடுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு பதிலாக மீண்டும் பள்ளிக்கல்வித் துறை அவருக்கு வழங்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தத் துறை மாற்றம் தவெக அமைச்சரவையில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
