“என் அறைக்கு வர்றியா?”… சாமியார் வேஷத்தில் வந்த நபருக்கு பெண் கொடுத்த அதிரடி பதிலடி… ஆன்மீக பூமியில் பகீர் சம்பவம்…!!

By Gayathri on புரட்டாதி 4, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற ராம் காட் பகுதிக்கு சென்ற ஒரு பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நைரா ராய் என்ற அந்தப் பெண், பண்டிதர் தோற்றத்தில் வந்த ஒரு நபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்துள்ளன.

நைரா ராய் வெளியிட்ட அந்த வீடியோவின்படி, அவர் ராம் காட் பகுதியில் அமைதியாக அமர்ந்து அங்கிருந்த நாய்க்குட்டி ஒன்றை கொஞ்சிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பண்டிதர் போன்ற தோற்றமுடைய நபர், நைராவைத் தனது அறைக்கு வருமாறும், அவருக்குத் தானே உணவு சமைத்துத் தருவதாகவும் கூறி அழைத்துள்ளார். இந்த எதிர்பாராத அழைப்பால் அதிர்ச்சியடைந்த நைரா, உடனடியாக அந்த நபரை அங்கேயே வைத்து கடுமையாக தட்டிக்கேட்டுள்ளார். பெண்ணின் துணிச்சலான பதிலடியைக் கண்ட அந்த நபர் பயந்துபோய் அங்கிருந்து உடனடியாக அகன்றுவிட்டதாக அந்த வீடியோவில் அவர் விவரித்துள்ளார்.

   

இந்த சம்பவத்தை விளக்கி நைரா பதிவிட்ட வீடியோ லட்சக்கணக்கான பார்வைகளை கடந்து இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அமைதியாக செல்லாமல் தவறான நோக்கில் வந்த நபரை தைரியமாக எதிர்கொண்ட நைராவை நெட்டிசன்கள் பலரும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். அதேசமயம், ஆன்மீக அடையாளங்களை வைத்துக்கொண்டு வலம் வரும் அனைவரையும் எளிதாக நம்பிவிடக் கூடாது என்றும் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமாகவோ அல்லது காவல்துறையினராலோ அதிகாரப்பூர்வமாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.