திமுகவில் அமைப்பு ரீதியாக பெரும் மாற்றங்களைச் செய்ய அக்கட்சியின் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது திமுகவில் மொத்தம் 78 கட்சி மாவட்டங்கள் உள்ள நிலையில், அவற்றில் திருவள்ளூர் ரமேஷ், வாசுதேவநல்லூர் எம்எல்ஏ ராஜா மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.கணேசன் ஆகிய 3 பேர் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களாகப் பொறுப்பில் இருக்கின்றனர். இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் வெறும் 3.8% மட்டுமே ஆகும். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதற்கான காரணங்களை ஆராய்ந்த திமுக தலைமைக்கு, இந்த விவகாரம் அமைப்பு ரீதியாகக் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழக அரசியல் களம் புதிய திருப்பங்களைச் சந்தித்து வரும் வேளையில் இந்த மாற்றம் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் விசிக இருந்தவரை பட்டியல் சமூக மக்களுக்கான அங்கீகாரம் குறித்த பிம்பம் வலுவாக இருந்தது. ஆனால், தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது நிழல் அமைச்சரவையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு (20%) வாய்ப்பளித்து மக்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், விஜய்யின் தவெக அரசியல் ரீதியாகப் பெற்று வரும் மதிப்பை எதிர்கொள்ளவும், இழந்த மக்கள் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் திமுகவும் அதிரடி ஆட்டத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, திமுகவின் உட்கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தற்போதுள்ள 78 கட்சி மாவட்டங்களை 117 ஆக உயர்த்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். இந்த புதிய மாற்றத்தின் மூலம், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை 3லிருந்து 20 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட அறிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் கட்சித் தலைமைக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் லண்டன் பயணத்தை முடித்து சென்னை திரும்பியவுடன் இந்த அதிரடி அறிவிப்புகளும், மாவட்ட செயலாளர்கள் மாற்றமும் வேகமெடுக்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில், பெற்றோர் இல்லாத ஏழை தலித் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை…
கோவை மேற்கு புறவழிச்சாலைக்கு உட்பட்ட மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் கடந்த ஜூன் 21-ஆம் தேதி, சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்…
தஞ்சாவூர் அருகே ஆர். சுத்திப்பட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில், திடீரென நெல்…
அதிமுகவில் டி.டி.வி. தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கோரிக்கை…
தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…
சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…