கொளத்தூரில் அதிர்ச்சி திருப்பம்…. ECI-யின் விளக்கத்தை நிராகரித்த திமுக… அடுத்த கட்ட அதிரடி நகர்வு…!

By Nanthini on ஆவணி 7, 2026

Spread the love

கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை சரிபார்ப்புப் பணிகள் முடிவடைந்து, வி.எஸ். பாபுவின் வெற்றி உறுதியாகியுள்ளதாகவும் எந்தவித குளறுபடிகளும் நடக்கவில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

இருப்பினும், இந்த முடிவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் திமுக தரப்பு, வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு அத்துமீறல்களும் குளறுபடிகளும் நடந்துள்ளதாக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ மூலம் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்காத திமுக, இந்த விவகாரத்தை மீண்டும் நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்று, தேர்தல் முடிவுகளுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி தங்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெறத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.