தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், ‘தி மிசா மார்க்’ என்ற குறும்படத்தை வெளியிட உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவசரநிலைக் காலத்தில் ஸ்டாலின் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் எதிர்கொண்ட கொடுமைகளை விவரிக்கும் வகையில், ஏற்கனவே ஸ்டாலினால் வெளியிடப்பட்ட 10 நிமிட வீடியோப் பதிவை மையமாகக் கொண்டு இக்குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் விஜய் எழுப்பிய விமர்சனங்களை முறியடிக்கவும், ஸ்டாலினின் அரசியல் தியாகங்களை வாக்காளர்களிடம் விரிவாகக் கொண்டு சேர்க்கவும் இந்த வீடியோவை ஒரு பிரதானப் பிரச்சார ஆயுதமாகப் பயன்படுத்த திமுக தலைமை உத்தேசித்துள்ளது. விஜய்யின் பேச்சால் எழுந்த அரசியல் காரசார விவாதங்களுக்கு மத்தியில், வரலாற்றுச் சான்றுகளுடன் பதிலடி கொடுக்க உதயநிதி எடுத்துள்ள இந்த உத்தி தேர்தல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
