அட கடவுளே… பெண்களோட வாழ்க்கை எவ்வளவு… கஷ்டம்னு இப்பதான் தெரியுது… டெல்லி இரவில் பெண் வேடத்தில்… சுற்றிய இளைஞரின் பகீர் அனுபவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

By Swetha on புரட்டாதி 19, 2026

Spread the love

டெல்லியைச் சேர்ந்த ‘ பெஜெயின்டில் ‘ என்ற சமூக வலைதளப் படைப்பாளி , இரவில் பெண்களின் பாதுகாப்பைச் சோதித்துப் பார்க்க ஒரு சமூக பரிசோதனையை மேற்கொண்டார். இதற்காக அவர் பெண் போல ஆடை அணிந்து, தலை மற்றும் முகத்தை துப்பட்டாவால் மூடிக்கொண்டு, தனது இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் சுமார் இரண்டு மணி நேரம் டெல்லி வீதிகளில் சுற்றிவந்தார்.

இந்த பரிசோதனையின் போது அவர் கண்ட காட்சிகள் அவருக்குப் பெரும் அதிர்ச்சியைளித்தன. வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே பெட்ரோல் பங்க் மற்றும் வீதிகளில் இருந்த பல ஆண்கள் அவரைத் தொடர்ந்து உற்றுப் பார்க்கத் தொடங்கினர். சிலர் வாகனங்களில் அவரைப் பின்தொடர முயன்றனர். மேலும், சில ஆட்டோ ஓட்டுநர்கள் அவரது வாகனத்தை மறிக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும், தனது நண்பர்கள் வீடியோ எடுப்பதைக் கண்ட பின்னரே விலகிச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

https://www.instagram.com/reel/DdWhNe0z3DF/?utm_source=ig_web_button_share_sheet

   

இரண்டு மணி நேரத்திற்குள் பைக், ஆட்டோ, கார் என பலதரப்பட்ட வாகனங்களில் சென்றவர்களும் தன்னைப் பின்தொடர முயன்றதாகக் கூறிய அவர், சூழ்நிலை மிகவும் பயமாக மாறியதால் பரிசோதனையைப் பாதியிலேயே நிறுத்தினார். “இரவில் பெண்கள் தனியாக வெளியே செல்வது பாதுகாப்பற்றது, அவர்களின் வாழ்க்கை உண்மையிலேயே மிகவும் கடினமானது” என்று அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். இணையத்தில் வைரலான இந்த வீடியோ, டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தும் மீண்டும் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.