சட்டப்பேரவைக்குள் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்டாலின்?…. திமுகவை உலுக்கும் திருச்சி இடைத்தேர்தல் சீக்ரெட்…. முதல்வர் விஜய்க்கு நேரடி சவால்….!

By Nanthini on ஐப்பசி 14, 2026

Spread the love

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்க உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் திமுகவினரிடையே புதிய உற்சாகத்தை அளித்துள்ள நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகளின் தொடர் வற்புறுத்தலால் ஸ்டாலின் இம்முடிவை நோக்கி நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத்திற்குள் ஸ்டாலின் நுழைந்தால் மட்டுமே எதிர்க்கட்சியின் குரல் ஓங்கும் என்றும், முதல்வர் விஜயின் விமர்சனங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க முடியும் என்றும் கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, மீண்டும் ஒரு பலமான களம் அமைத்து ஸ்டாலினைச் சட்டப்பேரவைக்கு அழைத்து வர வேண்டும் என்பதில் திமுக தலைமை தீவிரமாக உள்ளது. தவெக அரசின் அரசியல் நகர்வுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தேர்தல் களத்தை மாற்ற திமுக வியூகம் வகுத்து வருகிறது. திருச்சி கிழக்குத் தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்டால் தேர்தல் களம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் பலத்த விவாதப் பொருளாக மாறி உள்ளது.