“நெஞ்சில் குடியிருக்கும்…” தெலுங்கில் பேசி கலக்கிய விஜய்…. சந்திரபாபு நாயுடு கொடுத்த திடீர் செம சர்ப்ரைஸ்…. தமிழ்நாட்டுக்கே குட் நியூஸ் தான்…!

By Nanthini on ஐப்பசி 14, 2026

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் ஒரு நாள் பயணமாக ஆந்திரப் பிரதேசம் சென்று, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். விஜயவாடாவிற்குச் சென்றடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அங்குள்ள புகழ்பெற்ற கனகதுர்கா கோயிலில் அவர் சாமி தரிசனமும் செய்தார். அதனைத் தொடர்ந்து, அமராவதியில் உள்ள ஆந்திர முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும் உடனிருந்தனர்.

இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கியப் பகுதியாக, கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்திற்குத் கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி கிருஷ்ணா நதிநீர் மற்றும் கோதாவரி-கிருஷ்ணா-கவிரியாறு இணைப்புத் திட்டம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கர்நாடகா உரிய நீர் வழங்க மறுத்து வரும் சூழலில், ஆந்திராவின் இந்தச் சந்திப்பு தமிழகத்திற்குப் பெரிதும் கைகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

   

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக விஜயவாடாவில் நடைபெற்ற கண்கவர் கலை நிகழ்ச்சியிலும் இரு முதல்வர்களும் இணைந்து பங்கேற்றனர். அப்போது பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தங்களது மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவினாலும் தமிழகத்திற்குத் தொடர்ந்து உரிய நீர் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

   

இதன் தொடர்ச்சியாக, அடுத்த இரண்டரை மாதங்களுக்குள் சென்னைக்கு 3 டிஎம்சி குடிநீரை வழங்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுவதால், சென்னையின் குடிநீர் தேவை கணிசமாகப் பூர்த்தி செய்யப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.