புனரமைக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைத்தார். அதன்பின்னர் உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ” இது உணர்ச்சிபூர்வமான நாள். எல்லோரும் முன்னேறுவது சிலருக்கு பிடிக்கவில்லை. எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் திமுக அரசு பாய்கிறார்கள். உங்களுக்காக தான் நான் இருக்கிறேன். ஆனால் இது சிலருக்கு பிடிக்கவில்லை” என்று பேசியுள்ளார்.
