106 குழந்தைகளுக்கு “13.9 மில்லியன் சொத்துக்களை” எழுதி வைத்த நபர்… அவர்களும் என் பிள்ளைகளே… உலகையே ஆச்சர்யப்பட வைத்த விஷயம்..!!

By Soundarya on ஆனி 21, 2025

Spread the love

தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய செல்வந்தராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பாவெல் துரோவ். டெலிகிராம் செயலியை உருவாக்கியவர் இவர்தான். இவர் தற்போது 13. 9 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்துக்களை தன்னுடைய  106 குழந்தைகளுக்கு எழுதி வைக்கப் போவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “எனக்கு மூன்று மனைவிகள் இருக்கும் நிலையில் அவர்கள் மூலமாக எனக்கு ஆறு குழந்தைகள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் நான் உலக நாடுகளில் விந்தணு தானத்தின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உயிரியல் தந்தையாக இருக்கிறேன். இயற்கையாக பிறந்த குழந்தைகள் மற்றும் விந்தணு தானத்தால் பிறந்த குழந்தைகளுக்கு இடையே எனக்கு எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது.

அவர்களும் என்னுடைய குழந்தைகள் தான் . அவர்களையும் நான் நேசிக்கிறேன். ஆனால் அடுத்த முப்பது வருடங்களுக்கு எவருக்கும் என்னுடைய சொத்தை பயன்படுத்த அனுமதி இருக்காது. உலகளவில் தற்போது விந்தணு பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உனது. அதை சமாளிப்பதற்கு தான் என்னால் முடிந்த உதவியை செய்தேன். இதன் மூலமாக குழந்தைகளை பெற்றெடுக்க  முடியாத குடும்பங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடிகிறது என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது உலக அளவில் வியப்பையும், விமர்சனத்தையும் உருவாக்கி உள்ளது.